தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம்
மாநிலத் தலைவர் கே வரதராஜன் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் முனிராசு மாநில துணைத்தலைவர் எஸ் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில்19.07.2026 அன்று தூத்துக்குடி சித்ரா லாட்ஜில் வைத்து நடைபெற்றது பொது குழுவில் புதிய மாவட்ட தலைவராக எம். ராஜ்அவர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பழைய நிர்வாக குழு கலைக்கப்பட்டது. பொது குழுவில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் நிர்வாகிகளை நியமிக்க புதிய மாவட்ட தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
பொதுக்குழுவில் மத்திய அரசு வழக்கறிஞர் பால முருகன்,மின்சார வாரியம் கருப்பசாமி,ஓய்வு பெற்றோர் நல சங்க பொறுப்பாளர் சண்முகவேல், காவல் சார்புஆய்வாளர் பால்ராஜ்,சமூக ஆர்வலர்கள் ஜவகர்,தர்மர் சேதுராமன் பழக்கடை கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வழக்கறிஞர் சிவா சுப்ரமணியம் நன்றி கூறினார்.