தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி க.புதுப்பட்டி பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 70 இலட்சம் மதிப்பீட்டில் 1800 மீட்டர் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இதனைத் தொடர்ந்து க.புதுப்பட்டி பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் மேலும் க.புதுப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் வழங்குவதற்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூபாய் 17.81 கோடி மதிப்பீட்டில் 2.5 எம்.எல்.டி. நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்தகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் க. புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்தித்து அவர்களின் கல்வித் திறன் கொடுத்து ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவைனை பார்வையிட்டு அந்த உணவை ருசித்து சாப்பிட்டு பார்த்து மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பேரூராட்சிகளின் செயற் பொறியாளர் அம்சா க. புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.வின்சென்ட் பேரூராட்சி செயல் அலுவலர்கள் க. புதுப்பட்டி வெ. கணேசன் அனுமந்தன்பட்டி மணிகண்டன் இளநிலை பொறியாளர்கள் மாணிக்கம் மாணிக்கவாசகர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்