ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும், திரைப்படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையிலும் தஞ்சாவூர் உழவர் சந்தை அருகில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியின் நிர்வாகி டி.வி.கே. சாமியம்மாள் தலைமை தாங்கினார். நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு ஜனநாயகன் வெற்றியை கொண்டாடினர். அப்போது வாழ்க விஜய் என்ற கோஷங்கள் விண்ணை முட்டின.
இந்த கொண்டாட்டத்தின் போது தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் உழவன் டாக்டர் அருணா அஜீஸ் கண்ணன், அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த டி.வி.கே. சாமியம்மாள் அவர்கள் சந்தனம் மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பு மரியாதை செலுத்தினார்.பின்னர் டி.வி.கே. சாமியம்மாள் பேசியதாவது
தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும்.
உழவர் சந்தை அருகில் உழைக்கும் மக்களோடு சேர்ந்து கொண்டாடுவதில் பெருமை என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
இந்த நிகழ்வில் தவெக நிர்வாகிகளான கே கலையரசி மணிகண்டன் சகாயராணி அமராவதி சுகந்தி ஜெயராமன் தேன்மொழி பிரியங்கா ராணி ஜானகிராணி பிச்சையம்மாள்,மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்