ஈரோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முகமது ஆரிஃப் தலைமையில், ஈரோடு இ.பி.பி. நகர் சூளை அன்-நூர் மஸ்ஜித் மற்றும் மதரஸா பள்ளியின் செயலாளர் அ. ரசூல் முஹைதீன், துணைச் செயலாளர் காதர் முஹைதீன் மற்றும் இமாம் முஹம்மது சல்மான் ஆகியோர், தமிழ்நாடு அரசின் ஜவுளி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது, அமைச்சருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பொதுநலன் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்டத் தலைவர் முகமது ஆரிஃப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *