: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் ₹11 கோடி மதிப்பில் நான்கு மாடிகளுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நூலகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், மதுரை அண்ணா நூலகத்தை மிஞ்சும் வகையில் குளிர்சாதன வசதி, லிப்ட், அரசு போட்டித் தேர்வு புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நூல்கள், சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் பயன்படுத்தும் வசதிகள், பசுமை சூழல் மற்றும் சிறிய விளையாட்டு வசதிகளுடன் இந்த நூலகம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இன்னும் நான்கு மாதங்களில் நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு, தென் மாவட்ட மக்களுக்கு சிறந்த அறிவுக் களமாக அமையும் என்றார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.