சென்னையை அடுத்த மணலி ஏலந்தனூர் கிராமத்தில் உள்ள குளத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அதனை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மணலி புது நகர் ஆண்டார்குப்பம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர் .
மக்களுக்கு பயன்பாடாக இருந்த குளத்தை அதிகாரிகள்கண்டுகொள்ளாமல் தூர் வாராமல் விட்டதால்தனி நபர்கள் குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும் வட மாநிலத்தவர்களுக்கு தகர சீட்டு அடித்து வாடகைக்கு விட்டும் குளத்தை சுருக்கி விட்டனர்குளத்துக்கான நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
குளம் தூர்வாரப்பட்டு, மழைநீரைச் சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட வேண்டும்
குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும்.
வீடுகளில் இருந்து கழிவு. நீர்கள் வெளியேற்றுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை
பகுதி மக்கள் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்துள்ளனர்.
ஏற்கனவே குளத்தை தூர் வாருவதற்கு டெண்டர் விடப்படும் மாநகராட்சி அதிகாரிகள் அதனை செயல்படுத்தாமல் தனி நபர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
.