கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கூரையுடன் கண்காணிப்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது.சார்க் கேசஸ் (SAARC CASES) நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிறுத்த திறப்பு விழாவிற்கு நிறுவனத்தின் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி சரக காவல் துறை காவல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் கரிகால் பாரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார்…
இந்நிகழ்ச்சியில், செட்டிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் சார்க் கேசஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் பால ஆதித் உட்பட , சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சார்க் கேசஸ் நிறுவனத்தின் தலைவர் முருகேசன், “தினமும் ஈச்சனாரி கோவிலுக்கு செல்லும் வழியில் பேருந்துக்காக வெயிலும் மழையிலும் காத்திருக்கும் பொதுமக்களின் சிரமத்தை நேரில் பார்த்தேன்.
அவர்களின் நலனை கருத்தில் கொண்டு சமூகப் பொறுப்புணர்வுடன் இந்த பேருந்து நிறுத்தத்தை அமைத்துள்ளோம். இது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா வசதி, மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் கூரையுடன் கூடிய காத்திருப்பு வசதி, அமர்வதற்கான இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ள இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.