தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தேவகரிஷ், 2026–27-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 38 முதல் 40 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் தேவகரிஷ், சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.

மாணவரின் வெற்றியைப் பாராட்டும் வகையில், பள்ளித் தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உமாபதி, பயிற்சியாளர் மகேஸ்வரன், பெற்றோர் கதிர்வேல், தேன்மொழி மற்றும் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். பெற்றோர் சார்பில் மாணவருக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

மாணவர் தேவகரிஷ் கூறுகையில், “எதிர்காலத்திலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான சாதனைகளைப் படைத்து, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன்” என்றார்.

பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவும், போதைப் பழக்கங்களில் இருந்து மாணவர்களைத் தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உடற்கல்வி ஆசிரியர் உமாபதி தொடர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *