குடந்தை ரத்ததானம் டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கான இலவச ஆதார் சேவை முகாம் சாரங்கபாணி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.இந்த முகாமில் புதிய ஆதார் பதிவு, ஆதார் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், கைரேகை அப்டேட், மொபைல் எண் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமிற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து பயனடைந்தனர். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சேவை வழங்கப்பட்டது.
குடந்தை ரத்ததானம் டிரஸ்ட் அறங்காவலர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதார் மைய அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டு சேவைகளை வழங்கினர்.முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்..