தேனி மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் சட்டமன்றத்தில் எம் எல் ஏ பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் மேகமலை வருச நாடு மலை கிராம மக்கள் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கவணி இருப்ப தீர்மானத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா பங்கேற்று அவர் பேசியது தேனி மாவட்டம் மேகமலை வருசநாடு பகுதிகளில் சுமார் 98 கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்களில் 12 000-க்கும் மேற்பட்ட மக்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர்

அந்த மண் அவர்களின் சொந்த மண் அவர்கள் பூர்வ குடிகளாக தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வருகின்றனர் அங்கு வீடுகள் அமைத்து வசிப்பதுடன் தோட்டம் விவசாயம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை கழித்து வருகிறார்கள்

அரசுத் துறைகளின் பல்வேறு கட்டிடங்களும் அந்தப் பகுதிகளில் உள்ளன என்னைப் பொறுத்தவரை அரசு துறையாக இருந்தாலும் அவை மக்களின் பயன்பாட்டுக்காக தான் செயல்படுகின்றன மக்களுக்கு விரோதமாக அரசோ நீதிமன்றமோ தீர
இருக்க முடியாது.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் சுமார் 98 கிராமங்களில் வசிக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது இது குறித்து கடந்த திமுக ஆட்சியின் போது முறையாக வாதிட வில்லை திமுக ஆட்சியின் போது இந்த பிரச்சனை தொடர்பாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உரிய வாதங்கள் முறையாக முன் வைக்கப்படவில்லை இதன் காரணமாகவே மலைக் கிராம மக்களுக்கு பாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது

ஆனால் தற்போது மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் திமுகவினர் மக்கள் மத்தியில் செயல்பட்டு வருகின்றனர் பல தலைமுறைகளாக அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவே தமிழக வெற்றிக்கழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் உரிய முறையில் சீராய்வு மனு தாக்கல் செய்து மேகமலை வருசநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்க சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்

அந்த மக்கள் தங்களது வாழ்விடங்களையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் விட்டுவிட்டு வெளியேறும் நிலை ஏற்படக்கூடாது அவர்களின் வாழ்வாதாரமும் பல தலைமுறையாக அவர்கள் அனுபவித்து வந்த உரிமைகளையும் பாதுகாக்கப்பட வேண்டும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக புதிய நடவடிக்கை எடுத்து மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே அந்த அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது இவ்வாறு சட்டமன்றத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ பேசினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *