தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளது இந்த விருது வழங்கப்பட்டதை யொட்டி போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற அலுவலகத்திலிருக்கு வருகை புரிந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களிடம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ் பார்கவி பொறியாளர் வி குணசேகரன் ஆகியோர் தமிழக அரசின் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர்

அப்போது போடிநாயக்கனூர் நகராட்சியின் செயல்பாடுகள் குறித்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் திமுக நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் பொதுக்குழு உறுப்பினர்கள் எம் சங்கர் ராஜா ரமேஷ் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் ஒருங்கிணைப்பாளரும் போடி நகராட்சி நகர் மன்ற கவுன்சிலருமான மகேஸ்வரன் உள்பட நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் திமுக நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *