நாகப்பட்டினம்,ஆக.25-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி அண்ணா நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52) விவசாயி. இவர் விவசாய பணிகளை செய்து கொண்டு வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயல் வெளியில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாட்டை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதில் வெறி நோயால் பாதிக்கப்பட்ட மாட்டுக்கு சக்திவேல் கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தது. உயிரிழந்த மாட்டை திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி பிரேத பரிசோதனை செய்து அங்கே அடக்கம் செய்தனர்