மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், கலைத்திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற்றன.


புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் 11–12ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கலைத்திருவிழாவில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா,கலந்து கொண்டு, மாணவர்களின் கலைத்திறமைகளை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரை யாடினார்.2026–2027ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா “இளையோர் திறன்” என்ற மையக்கருத்தில் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *