தென்காசி ஆகஸ்ட் 17 .


தென்காசி அடுத்துள்ள துவரங்காடு பகுதியைச்பஞ்சாயத்து தெரு சேர்ந்த
மாடசாமி மனைவி உடையம்மாள்(வயது-65) 30-அடி ஆழமுள்ள கிணற்றில் கால் தவறி விழுந்தார் இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் அவர் எழுப்பிய கூக்குரலை கேட்டு காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்

இந்நிலையில் முதல் முயற்சியாக அவரை மீட்டெடுக்கும் நிலையில் உள்ளூர் பிரமுகர்கள் முயன்ற நிலையில் அந்நிகழ்வு முயற்சி அளிக்காமல் போய்விட்டது இந்நிலையில் சுரண்டை தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 30 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு உபகரணங்களோடு கிணற்றுக்குள் சென்று மூதாட்டியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்

பின்னர் மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.இந்த மீட்பு பணியில் நிலைய அலுவலர் ரமேஷ் சிறப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் வீரர்கள் திருமலை,
கணேசன் சமுத்திரபாண்டி,செல்வம் ஆகியோர் ஈடுபட்டனர் மூதாட்டியை உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *