காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் நகராட்சி அலுவலக ஊழியர்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் காங்கயம் கிளை சார்பில் நடைபெற்ற ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்துக்கு சங்கத்தின் காங்கயம் கிளை தலைவர் சி.சக்திவேல் தலைமை வசித்தார். இதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல் ஆகியவனவற்றை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும், விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் காங்கயம் கிளை செயலாளர் ஜே.வருண், பொருளாளர் எஸ்.சதீஷ்குமார், துணைத் தலைவர் எஸ்.பாண்டியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.