மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
S. செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்