திருவள்ளூர் மாவட்டம் – மணவாள நகர் கிளையில் பெளர்ணமியை முன்னிட்டு
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன், தேசிய பொது செயலாளர் நந்தகுமார் அவர்கள் இருவரும் இணைந்து அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் .ஏழுமலை, திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் .சுரேஷ்குமார் , திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் அரிஷ்வர் அவர்களின் தலைமையில் மணவாள நகர் கிளை தலைவர் . ரமேஷ், மணவாள நகர் கிளை செயலாளர் சந்தோஷ் அவர்களின் முன்னிலையில் அன்னதானம் நடைப்பெற்றது. அன்னதான நிகழ்ச்சி விழாவையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகளும்,ஆராதனை நடைபெற்றன. அதனை தொடர்ந்து 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு ஏராளமானோர் கலந்து கொண்டு உணவருந்தினர் .
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் தேசிய, திருவள்ளூர் மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைவரும் சிறப்பு பூஜையில் பங்கேற்று ஐயப்பன் அருளைப் பெற்றனர்.
பக்தி, சேவை மற்றும் சமுதாய நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.
பணிகள் பல இருப்பினும் – திருப்பணி செய்வோம் என்ற உயரிய நோக்கத்துடன் அறக்கட்டளையின் சேவைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாகிகள் மறீறும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.