கடலூர் மாவட்டம்,சுற்றுலா தொழில் முனைவேர்கள் தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்..
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-22 சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்துள்ளதற்கிணங்க, சுற்றுலாத்துறையின் சார்பில் ஐந்தாவது தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகள் விழா-2026 பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.மேலும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் சுற்றுலா தொழில் முனைவேர்களை ஊக்குவிக்கும் விதமாக 31 விருதுகள் 13 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் எனவும், www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து 30.09.2026-க்குள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கும் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், ரயில்வே பீடர்ஸ் ரோடு, சிதம்பரம், மின்னஞ்சல் முகவரி touristofficecdm@gmail.com தொலைப் பேசி எண். 04144 238739, 89398 96399 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.