துறையூர் ஆக-28
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் ஆலோசனையின் பேரில் துறையூர் தேமுதிக நகர அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டனின் 74வது பிறந்தநாள் விழா(25/08/2026) கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு நகர அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் பாலக்கரையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார்,நகர செயலாளர் சங்கர், நகர பொருளாளர் முத்துக்குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சந்தனகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி சரவணன், நகர துணை செயலாளர் தாயம்மா மற்றும் நிர்வாகிகள் மாதவன்,பிரபாகர், பெருமாள், முருகேஷ் மற்றும் நகர வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர அவை தலைவர் செல்வராஜ் செய்திருந்தார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்