சீர்காழியில் நற்றுணை ஆசிரியர் தின விழா 120 ஆசிரியர்களுக்குதனித்தனியாக அமர வைக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆசிரியர் தின விழா நற்றுணை விருது வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது லயன் சங்கத்தை சேர்ந்த கல்யாணராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ஞானசம்பந்தம் ஜெய ராஜமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று சுமார் 120 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்

ஒவ்வொரு ஆசிரியரையும் அழைத்து அவர்களை தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் அமர வைத்து அவர்களுக்கு கிரீடம் மற்றும் பொன்னாடை அணிவித்து விருது வழங்குபவர்கள் நின்றவாறு அவர்கள் ஆசிரியருக்கு விருதுகளை வழங்கி நூதன முறையில் கௌரவித்தனர் விழாவில் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *