ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் சென்னையில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டி.டி.கே. சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று (03.09.2026) குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் தலா 1 கிலோ ரூ.35 வீதம் வழங்கும் விற்பனையினை தொடங்கி வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், நேற்று வாலாஜா வட்டம், பாரதிநகரில் அமைந்துள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் வெங்காயம் தலா 1 கிலோ ரூ.35 வீதம் வழங்கும் விற்பனையினை தொடங்கி வைத்தார்கள்.

வெளிச்சந்தையில் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் விலை நிலைப்படுத்தும் நிதி மூலம் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED), தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றிடமிருந்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) மூலம் வெங்காயம் கொள்முதல் செய்து நகர்ப்புறங்களில் உள்ள முழு நேர நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 108 நகர்ப்புற முழு நேர நியாயவிலைக் கடைகளுக்கு 20 மெ.டன் வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் 1 கிலோ வெங்காயம் ரூ.35க்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயம் விற்பனை எவ்வித புகாரின்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தொடர்பு அலுவலராக (Liaison Officer) துணைப்பதிவாளர் (பொவிநி) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வெங்காயம் இன்று (03.09.2026) முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 108 நியாயவிலைக் கடைகளில் உள்ள 110719 குடும்ப அட்டைத்தாரர்கள் பயன் பெறுவர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சரவணன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *