செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை (ம)சென்ட்ரல் சினேகா தன்னார்வத்தொண்டு நிறுவனம் இணைந்து காமராஜர் உருவப்படத் திறப்பு விழா ஆசிரியர் தின விழா மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் (ம) வழக்கறிஞரான கே,அன்பழகன் இந்த முப்பெரும் விழாவிற்கு தலைமை பொறுப்பினை வகித்தார்.
தொடர்ந்து விழாவிற்கு காமராஜர் கல்வி அறக்கட்டளை தலைவர் எம் பார்த்திபன், அக்ரிராமமூர்த்தி, டில்லிபாபு, ரத்தினம், குணசேகரன், வெங்கடேசன்துரைராஜன்,பொருளாளர் உள்ளிட்டோர் இந்த முப்பெரும் விழாவிற்கு முன்னிலை வைத்தார்கள் காமராஜர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் ஜெயபாலன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து மாணவர்கள் விடுதியில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நெமிலி வட்டாட்சியர் வி, பன்னீர்செல்வம் M.A.கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்ததோடு மாணவர்களிடத்தில் நல்லொழுக்கத்கோடு கூடிய பழக்கவழக்கங்களும் பெரியோர் சிறியோர் மதித்தலும் பெற்றோர்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தி தரவும் விடுதியில் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து கல்விமட்டுமல்லாமல் விளையாட்டு திறனை மேம்படுத்தி மாணவர்கள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விடுதி காப்பாளர் அவர்களுக்கும் நற்பெயரை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல் மேன்மேலும் சிறந்து படித்து டாக்டர்களாகவும் இளைஞர்களாகவும் மாவட்ட ஆட்சியர்களாகவும் வர வேண்டும் என மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதோடு காமராஜர் கல்வி அறக்கட்டளை மற்றும் தென்றல் சினேகா தன்வார்தொன்று நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் படிப்பு உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வட்டாட்சியர் மற்றும் காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அன்பழகன், தலைவர் பார்த்திபன்,மற்றும் தென்றல் சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆர்,தென்றல், டி.சினேகா உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில் எஸ் குமரன் லோக சந்திரன் திவாகர் அன்பழகன் பப்புனு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்த முப்பெரும் விழாவிற்கு கலந்து கொண்ட வட்டாட்சியர் அவர்களுக்கும் காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாகிகளுக்கும் தென்றல் சினேகா தன்னர்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கும் மாணவர் செல்வங்களுக்கும் விடுதி காப்பாளர் P.சுப்பிரமணி நன்றி பாராட்டினார்.