அரியலூர் நகராட்சி அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் அரியலூர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது தேர்தல் பார்வையாளராக மேலாளர் அழகுமுருகன் செயல்பட்டார்

தலைவர் அந்தோணிஸ்டீபன் செயலாளர் நாகராஜ் பொருளாளர் சாவித்திரி துணைத்தலைவர்கள் அழகுமுருகன் பொன்னுசாமி கார்த்திகேயன் மதன்குமார் இணைச் செயலாளர்கள் செல்வி தர்மராஜா வெள்ளைதுரை மகாராஜா செயற்குழு உறுப்பினர்கள் விக்டர்பால் ஞானசேகர் நல்லதம்பி ஜெயபாரதி நடராஜன் ராமசாமி ராகவன் தாமஸ்ஞானையா வினோத்ராஜ் கருணாநிதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

புதிய நிர்வாகிகளை பாராட்டி பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் கூட்டத்தில் வருகிற பத்தாம் தேதி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற உள்ளது அதில் அரியலூர் நகராட்சியின் சார்பில் திரலாக கலந்து கொள்வது, நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *