வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வடுகோட்டை பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆஞ்சநேயர் வேடமணிந்தவர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருளாசி வழங்கினார். இதனை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.
மேலும், விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியவர் ஸ்ரீ தேவி டீ ஸ்டால் நிர்வாகத்தினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.