வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம் முண்டி பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி ஸ்ரீ கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விழாவை சிறப்பித்தனர்.விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த தர்மகர்த்தா M. பஞ்சாட்சரம், M. ராமச்சந்திரன், P. விதன் குமார் மற்றும் ஊர் இளைஞர்கள் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.