அரியலூர் அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் அரசு கலைக்கல்லூரி 58வது பட்டமளிப்பு விழா அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா கலையரங்கில் நடந்தது கல்லூரி முதல்வர் முனைவர் து சேகர் தலைமை தாங்கினார்

அறந்தாங்கி நைனாமுகம்மது கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் திருச்செல்வம் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி விழா பேருரையாற்றினார்

இளங்கலை முதுகலை இளம் அறிவியல் முது அறிவியல் பாடப் பிரிவுகளை சேர்ந்த 777 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர் அரங்கு நோக்கி வருகை தந்த கல்வியாளர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றல் நடந்தது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *