கோவை
கோவை குரும்பபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில், 2026–27ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு B.E./B.Tech. மாணவர்களுக்கான “ஆரோஹணம் – 2026” முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா கல்லூரியின் W-Block அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

ஆதித்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் Er. C. Sukumaran தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நிர்வாக அறங்காவலர்கள் திரு. S. Praveen Kumar மற்றும் டாக்டர் Srinidhi Praveen Kumar ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் R. Thirumalai அனைவரையும் வரவேற்று, கல்லூரியின் கல்விசார் செயல்பாடுகள், மாணவர் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக Lion R. Mathanagopal, Past International Director, Chairman & Editor – The Lion India Magazine, கலந்து கொண்டார். அவர் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் கலந்துரையாடியதுடன், இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேகமாக முன்னேறி வருவதாகவும், இந்த வளர்ச்சியில் இளம் தலைமுறையினர் புதுமையான சிந்தனைகள் மற்றும் திறன்களின் மூலம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கல்லூரியில் பெறும் அறிவையும் திறன்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் Joseph V. Thanikal, டீன் – அகாடமிக் டாக்டர் I. Rajendran, துறைத் தலைவர்கள் (HODs), பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். புதிய மாணவர்களை ஆதித்யா கல்லூரி குடும்பத்திற்குள் வரவேற்று, அவர்களின் உயர்கல்விப் பயணத்தை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தொடங்குவதற்கான சிறப்பான நிகழ்வாக “ஆரோஹணம் – 2026” அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *