புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2026 – 2029 ஆம் ஆண்டிற்க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் செயல்பாட்டு அணி வேட்பாளர்களாக 11 நபர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தல் ஞாயிறு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் 1189 நபர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது . தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையர் வழக்கறிஞர் முனைவர் க.பிரபாகரன் அறிவித்தார்.
இதில் 795 நபர்கள் வாக்களித்தனர்.செல்லதக்க வாக்குகள் – 738, செல்லாத வாக்குகள் – 57,
62% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்
- அருள்ராசு.இரா- 660
- ஆனந்தராசன்.ர- 612
- இராசா. மா.சு- 620
- இளமதி சானகிராமன்.க- 172
- உசேன்.அ- 195
- கோதண்டபாணி. நா- 586
- சரசுவதி .வை- 222
- சிவகுமார்.வி- 127
- சிவேந்திரன்.வி-547
- சுரேசுகுமார்.மு-613
- செயந்திராசவேலு – 613
- திருநாவுக்கரசு.ப.- 674
- பாரதி. கோ-280
- பாலசுப்பிரமணியன்.மு- 639
- புவனேசுவரி.எ- 210
- முத்து.வி-681
- மோகன்தாசு.சீனு – 667
இதில் 11 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கலைமாமணி முனைவர் வி.முத்து தலைவராக ஆறாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
துணைத்தலைவர்களாக, 1.பாவலர் ப.திருநாவுக்கரசு
2.நா.கோதண்டபாணி, செயலர் பாவலர் சீனு.மோகன்தாசு, பொருளாராக பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்,
துணைச் செயலாளராக பொறிஞர் மு.சுரேசுகுமார்,
ஆட்சிக்குழு உறுப்பினர்களாக
- இரா.அருள்ரசு
- மா.சு.இராசா
- செயந்தி ராச வேலு
- அ.சிவேந்திரன்
- ர.ஆனந்தராசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மாலை, பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இறுதியில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கலைமாமணி முனைவர் வி.முத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.