கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. & சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது…
பிரபல கல்வியாளரும் நிறுவன உருவாக்கத்தில் சிறந்து விளங்கியவருமான ஐ.ஐ.டி.ஆர்.ஏ.எம். ஆளுநர் குழுத் தலைவர்,பேராசிரியர் சுதீர் கே. ஜெயின், பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற இரண்டு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்றார்.
முன்னதாக “ஆசிரியர்களை உருவாக்குதல், நிறுவனங்களை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல்,நிகழ்வு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் டாக்டர் ஜி. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இதில் சிவில் பொறியியல் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சசிவகுமார் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் மேம்பாடு, நிறுவன வளர்ச்சி மற்றும் கல்வித் தலைமைத்துவம் தொடர்பாக பேராசிரியர் சுதீர் கே. ஜெயினுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடினர்.
இதன் மூலம், உயர்கல்வித் துறையில் சிறப்பான அனுபவம் கொண்ட பேராசிரியர் சுதீர் கே. ஜெயினுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றனர்.
நிகழ்வின் இறுதியில்,சிவில் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். பிரவீன் குமார் நன்றியுரை வழங்கினார்.
இதே போல பிற்பகல், “உங்கள் கல்லூரி வாழ்க்கையை சிறப்பாகப் பயன்படுத்துதல் – ஓர் உரையாடல்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பேராசிரியர் சுதீர் கே. ஜெயின் மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, உயர்கல்வி மற்றும் நிறுவனத் தலைமைத்துவத்தும் குறித்து பேசினார்..
மாணவர்களுக்கான நிகழ்விற்கு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ஜி. திலகவதி தலைமை தாங்கினார்.
மாணவியர் நலத் துணை முதல்வர் டாக்டர் பி. ஸ்ரீதேவி வரவேற்புரையாற்றினார்.
டாக்டர் ஜி. சந்திரமோகன், செயலாளர், பேராசிரியர் சுதீர் கே. ஜெயினுக்கு நினைவுப்பரிசை வழங்கினார். நிர்வாகத் துறை டீன் டாக்டர் எஸ். சரவணன் நன்றியுரை வழங்கினார்.
இரு கலந்துரையாடல்களும் ஆசிரியர் மேம்பாடு, நிறுவன உருவாக்கம், கல்வித் தலைமைத்துவம் மற்றும் கல்லூரி வாழ்க்கையைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் ஆகிய முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றது குறிப்பிடதக்கது..