திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தெள்ளார் ரோட்டரி கிளப் சாசன தலைவர் டிகேஜி ஆனந்தன் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், டி.டி.ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார்.


எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து கல்லூரி தலைவரும், புதுவை தமிழ்ச் சங்க தலைவருமான கலைமாமணி முனைவர் வி.முத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் புதுவை தமிழ்ச் சங்க தேர்தலில் தொடர்ந்து 6 ஆவது முறையாக வெற்றி பெற்ற கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் கவிஞர் தமிழ்ராசா பாராட்டு கவிதை வாசித்தார். மேலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன், ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.விநாயக மூர்த்தி, எக்ஸ்னோரா ரயில்வே தனசேகரன், கேப்டன் பிரபாகரன், சமூக ஆர்வலர் பொன்னம்பலம், கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன், நல்நூலகர் ஜா‌.தமீம், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது, குறும்பட துணை இயக்குனர் முகமது ஜியா, கணினி ஆசிரியர் பா.சுரேஷ், கவிஞர் நெல்லை சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் கல்லூரி நிர்வாக அலுவலர் செல்வம் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *