வெங்கம்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்


கல்பாக்கம் செப் 19
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குனர். சீதாலட்சுமி அறிவுத்தலின்படி,மேம்படுத்தப்பட்ட களப்பணிக்கான இலவச மருத்துவ முகாம் செங்கல்பட்டு மாவட்டம் திருகழுக்குன்றம் அடுத்த வெங்கம்பாக்கம் ஊராட்சி பகுதியில் நேற்று 18ம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை,விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் ஏழுமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ரியல் அறக்கட்டளை முனைவர் லாரன்ஸ் அவர்கள் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச். ஐ. வி /எய்ட்ஸ் மையம் குமாரசாமி, பேபி, பபிதா ஆகியோர் ஆலோசனையின்படி, எஸ். ஆர். எம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சையது அப்பாஸ் நசிம், சஞ்சய் மரியா ஜெயின், ரம்யா, இளவரசன் மற்றும் பணியாளர்கள் ஜெய் கணேஷ், சுவேதா, பானுபிரியா, இளமதி செய்யூர் நம்பிக்கை மையம் அருண் குமார் , கேளம்பாக்கம் ஆய்வக நுட்புநர் லலிதா,நடமாடும் நம்பிக்கை மையம் பத்மபிரியா,அர்ச்சனா, காசநோய் பிரிவு ரமிசா பாத்திமா,ரியல் மற்றும் ஸ்வாம் அறக்கட்டளை திட்ட மேலாளர்கள் மணிகண்டன், சரிதா பணியாளர்கள் கீர்த்தனா,மலர்விழி, சாந்தி, கோமதி, முருகன், கிராம சுகாதார செவிலியர் அலமேலு மங்கை உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 100 க்கும் மேற்பட்ட இலக்கு மக்கள், பொது மக்கள் பங்கேற்றனர். இம் முகாமில், கண், தோல், எலும்பு, பொது மருத்துவம், எச். ஐ. வி,பால்வினை நோய், மஞ்சள்காமலை, கல்லீரல் அழற்சி , பரிசோதனை மற்றும் சிகிக்சை அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *