கோவையில் ஆர்.எஸ். புரம் லேடிஸ் கிளப் சார்பில் “தீபாவளி உத்சவ் 2026” எனும் இரண்டு நாள் சிறப்பு விற்பனை கண்காட்சி ஆர்.எஸ். புரம் லேடீஸ் கிளப் வளாகத்தில் துவங்கியது செப்டம்பர் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இதற்கான துவக்க விழா,லேடீஸ் கிளப் தலைவர் ஜெயஸ்ரீ பிரசாத் தலைமையில் நடைபெற்றது.. பூஜா சுதாகர் ராவ் மற்றும் சந்தீப் கவுர் ஆனந்த் மற்றும் பலர் இணைந்து கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் புடவைகள், ஆடைகள், நகைகள், காலணிகள், உணவுப் பொருட்கள், வாழ்க்கை முறை சார்ந்த பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, கண்காட்சியில் உள்ள அரங்குகளில் சுமார் 90 சதவீதம் பெண் தொழில் முனைவோரால் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், பூச்சி மற்றும் கோர்ட் சிறுவானி ஆகிய தொண்டு அமைப்புகளுக்காக சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கரோக்கி இசை நிகழ்ச்சி, தம்போலா, மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மற்றும் சிறப்பு பரிசுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையிலும் நடைபெறும் இந்த உத்சவத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *