கப்பல் கட்டு தளம் தொழில் வளர்ச்சிக்கு தேவைதான். ஜேசையா வில்லவராயர்.
அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேனசயா வில்லவராயர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 2026. 2028 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவிவேற்க உள்ளனர்

பதினைந்தாவது தலைவராக நான் பதவியேற்று உள்ளேன் 1985 ஆம் ஆண்டு இந்த சங்கம் உருவாக்கப்பட்டது பல கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது நாங்கள் அடுத்த கட்டத்திற்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் செல்கிறது தூத்துக்குடி நகரில் இருக்கின்ற தொழிற்சாலை தொழில்நகரத்தில் தொழில் செய்கிற அனைவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்

பல்வேறு வகையில் இந்த சங்கம் பல வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது துறைமுகத்தை உபயோகப்பாளர்கள் ஒரு கோரிக்கை நீண்ட காலமாக வைத்திருக்கிறோம் இங்கு இருக்கின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் தொழில் நலிவடையகூடாது என்ற கூறி வருகிறோம். கப்பல் கட்டு தொழிற்சாலை நாங்கள் வரவேற்கிறோம் தேவையான ஒன்றுதான் ஒரு சாரார் வேண்டாம் என்று கூறுகிறார்கள்

உப்பளத்துக்காரர்கள் வேண்டாம் என்று கூறுகிறார்கள் வேலை வாய்ப்பு உருவாகும் அரசு என்ன முடிவு எடுத்தாலும் அடுத்தது எங்களுடைய முடிவை அதனை அடுத்து தெரிவிப்போம் நாலு விமானம் தான் தூத்துக்குடியில் இருந்து இயங்குகிறது தூத்துக்குடியில் இருந்து டில்லி மும்பை ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறோம்

புதிய விமான நிலைய கட்டப்பட்ட பிறகும் எந்த ஒரு விமானமும் கூடுதலாக இயக்கப்படவில்லை அதனை கோரிக்கையை நாங்கள் வைத்துள்ளோம் தூத்துக்குடி நல்ல வளர்ச்சி இருக்கும் தொழிற்சாலைகள் தொடர்ந்து வருகிறது தூத்துக்குடியில் நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும் அதன் மூலம் வேலை வாய்ப்பு பெறுவாகும்

தூத்துக்குடி நகர வளர்ச்சிக்கு எங்களது சங்கத்தின் சார்பில் நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளோம் நகரம் விரிவடைந்து உள்ளது நாங்கள் ஒவ்வொரு முறையும் அமைச்சர்.மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் கூறி வருகிறோம்.

அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும் தூத்துக்குடி நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் முன்பை விட தற்போது நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது தொழிற்சாலைகள் நிறைய வந்தால் தான் வேலை வாய்ப்புகள் பெருகும் சென்னைக்கு அடுத்து தூத்துக்குடிக்குத்தான் ஒரு பெருமை உள்ளது தூத்துக்குடியில் நான்கு வழி சாலைகள் நிறையாக உள்ளது விமான நிலையம் உள்ளது துறைமுகம் உள்ளது அரசாங்கம் எல்லா தொழிலும் சென்னைக்கே கொண்டு செல்கிறது தூத்துக்குடிக்கு கொண்டு வர வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு நாங்கள் கோரிக்க வைத்து வருகிறோம் என்று அகில இந்திய வர்த்தக சங்கத் தலைவர் ஜேனசயா வில்லவராயர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *