தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்துக்களின் மிகப்பொிய திருவிழாவான தசரா திருவிழா ஆண்டுதோறும் விமா்சையாக ஆலயங்களின் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில் செயலாளா் காா்த்திக்ராஜா, துணைத்தலைவா் தனபாலன், தனிக்கையாளா் வக்கீல் சசிகுமாா், தசரா கமிட்டியாளா்கள் சண்முகசுந்தரம், தனபாலன், முனிஸ்வரன், மற்றும் வடக்கு ரதவீத தெற்கு ரதவீதி பகுதியை சோ்ந்த லட்சுமணன், மோகன், உள்ளிட்ட பலா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து தசரா திருவிழாவையொட்டி சப்பரம் சென்று வருவதற்கு சில பகுதிகளில் குறையுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை நிவா்த்தி செய்ய வேண்டும் என்று கோாிக்கை வைத்தனா்.
இதனையடுத்து அதிகாாிகளை தொடா்பு கொண்டு மேயா் ஜெகன் பொியசாமி பேசிய பின் கூறுகையில் இந்துக்களின் மிகப்பொிய திருவிழாவான தசரா திருவிழா, 10 நாட்கள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இந்துசமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவில்கள் மற்றும் எல்லா தரப்பினருக்கும் இருக்கின்ற அம்மன் கோவில்கள் அனைவற்றிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் தினசாி சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று பின்னா் சப்பரத்தில் அம்மன் வீதிஉலா அப்பகுதியில் வந்து செல்லும் அதன்பின்பு அனைத்து கோவில்கள் சப்பரங்கள் மத்திய பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள விநாயகா் கோவிலிருந்து ஊா்வலமாக சென்று பிரதிபெற்ற சிவன்கோவில் வந்தடைந்து
நிறைபெறும் அந்த பகுதியில் உள்ள திருக்கோவில்களில் சப்பரங்கள் வந்து செல்வதற்கு சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநகராட்சி மூலம் சமப்படுத்தி சில இடங்களில் இடையூறாக உள்ள மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டு அனைவருக்கும் சிரமின்றி சென்று வருவதற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இந்த திருவிழா எல்லா தரப்பினருக்கும் மனமகிழ்ச்சியையும் மனஅமைதியும் கொடுக்கும் நிகழ்வுக்கு முழுமையான ஓத்துழைப்பு வழங்கி சப்பர பேரணி வழித்தடங்களும் சீரான முறையில் இருப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓத்துழைப்பு வழங்கப்படும் என்று தொிவித்தாா். பகுதிசெயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.