முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
கரூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கரூர்–கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். மாவட்ட அம்மா பேரவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, கழகத்தின் வளர்ச்சிப் பணிகளில் அம்மா பேரவையின் பங்கு, பேரவையின் செயல்பாடுகள் மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர மற்றும் பேரூர்க் கழக அம்மா பேரவைச் செயலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.