கவித்தேடல் பதிப்பகம், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறைஇணைந்து ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இணைய வழியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்விற்கு தகடூரான் தமிழ் அறக்கட்டளை தலைவர் தமிழ்மகன் ப.இளங்கோ தலைமை வகித்தார்.
தகடூர் வாசகர் வட்டத்தின் தலைவர் கூத்தப்பாடி மா.பழனி முன்னிலை வகித்தார்.
கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவர் சிவகுமார் பழனிவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.முன்னதாக கவித்தேடல் பதிப்பகத்தின் நிறுவுனர் மற்றும் பதிப்பாளர் கோகுல் காளியப்பன் வரவேற்று பேசினார்.ஏரியூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நா.நாகராஜ் நன்றி கூறினார்.
கல்லூரியின் தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் மா.புவனேஸ்வரி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.நிகழ்வில் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் அப்துல்கலாம் பல்வேறு பொருண்மைகளில் உரையாற்றினார்கள்.நிகழ்வில் பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ் ஆர்வலர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.