அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
அரியலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது இதனை மாவட்ட கலெக்டர் ந மிருணாலினி தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுடன் இணைந்து குப்பைகள் முட்செடிகள் நெகிழி கழிவுகளை அகற்றினார்
அப்போது அரசு அலுவலகங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் தூய்மையை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் தூய்மை பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா திட்ட இயக்குனர் சங்கமித்திரை வருவாய் கோட்டாட்சியர் பிரேமி வட்டாட்சியர் மஞ்சுளா மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந லெனின் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் பேராசிரியர் முனைவர் வி விஜயலட்சுமி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்