நாகை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் நல சங்கத்தின் பொதுக்குழு மற்றும் குடும்ப விழா நாகையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில்

மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வகுமார் செயலாளர் அறிக்கையும் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் பொருளாளர் அறிக்கையும் சமர்ப்பித்தனர்

மாவட்ட அமைப்பாளர் கார்த்தி வரவேற்புரை வழங்கினார். தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்துடன் விழா தொடங்கி செயற்குழு மற்றும் பொது குழு உறுப்பினர்களுக்கு சால்வே அணிவித்து 2017 ஆம் ஆண்டிற்கான ஐடி கார்டு மட்டும் விருது வழங்கப்பட்டு மேஜிக் ஷோ நடைபெற்றது . இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சர் ஐசக் நியூட்டன் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆனந்த் கலந்து கொண்டு நமது மாநில சங்கத்தின் உயரிய கல்வி திட்டத்திற்கு மூன்று இலவச இன்ஜினியரிங் சீட் தருவதாக மாவட்ட பொதுக்குழுவில் அறிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் பிரேம்லால், மாநில காக்கும் கரங்கள் திட்டத்தின் தலைவர் சிவகுமார் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி மாநிலத் துணைத் தலைவர் சரவணன் மாநில 7ம் மண்டல செயலாளர் அப்துல் காதர் மாநில 9ம் மண்டல செயலாளர் கருப்பசாமி முன்னாள் மாநில தலைவர் பத்மநாபன் மாநில காக்கும் கரங்கள் திட்டத்தில் துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் வளர்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினர் நன்றியுரை மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன் வழங்கினார். விருந்து உபசரிப்புடன் விழா நிறைவேற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *