காயல் பட்டிணம் :அக்12

சமூக வளைதங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் இஸ்லாமிய பெண்களை அப்பகுதியின் ஜமாத்தாரர்கள் கட்டு படுத்த வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வேண்டு கோளை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தென்காசி மாவட்டம்,கடைய நல்லுரை சேர்ந்த வஹிதா என்ற பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி முத்துக்குமரன் என்பவர் ஏமாற்றி விட்டதாகவும் முத்துக்குமரன் விவகாரத்துடன் தற்கொலை பண்ணுவதாக கூறி மது மற்றும் சிகரட் பிடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், தமிழகத்தில் இஸ்லாமிய பெண்கள் பலரும் சமூக வளைதங்களில் டான்ஸ் – பாடல்களை பாடுவது போல் பல்வேறு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு அதன் மூலம் பேமஸ் ஆகனும் அதிலிருந்து வருமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு இத்தகை செயலை செய்து வருகின்றனர்.

மேலும். இஸ்லாமிய அடையாளமான ஹீஜாப்பை அணிந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறோமே இதனால் உறவினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் நாம் செய்யும் செயலை தவறாக நினைப்பார்களே என்று கொஞ்சம் கூட உணராமல் ரீல்ஸ் வீடியோ மோகத்தால் இஸ்லாமிய மார்க்கத்தின் நெறி முறைகளை முறையாக கடை பிடிக்காத இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனவே : இஸ்லாமிய மார்க்கத்தில் மது ,புகை பழக்கம் ஹராமான செயல்,அப்படி இருக்க இஸ்லாமிய பெண்னாக இருக்க கூடிய வஹீதா மது, சிகெரட் பிடிப்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான செயல் இத்தகை செயலை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. மேலும். வஹீதாகவுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் யாரும் பேசவோ ,குரல் கொடுக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

ஆகவே,சமூக வளைதங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் இஸ்லாமிய பெண்களை கண்டறிந்து அப்பகுதியின் ஜமாத்தாரர்கள்,மற்றும் உறவினர்கள் மூலம் அறிவுரைகளை வழங்கி கட்டு படுத்துனால் மட்டுமே இனி வரும் காலங்களில் இஸ்லாமிய பெண்கள் வழி தவறாமலும்,பாதிக்க படாமலும்,பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *