செங்குன்றம் செய்தியாளர்
அக். 12

ஆர்.ஆர்.ஆன்மீக அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொளத்தூரில் , நான்காயிரம் பொம்மைகள் உள்ளடக்கிய பிரமாண்டமான கொலு கண்காட்சி.

கொளத்தூர், பட்மேடு, ஜி. கே. எம். காலனி 36 ஆவது தெருவில் நவராத்திரி திருக்கோயில் அமைந்துள்ளது..இதனை ஆன்மீக கொடை வள்ளல்கள் டிஆர் குணசேகர் டி ஆர் வேலுமணி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்தக் கோயிலில் 12 ம் ஆண்டு நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழா வருகின்ற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியளவில், தேவி குகயோகி அருளாளர் புண்ணியகோட்டி மதுரை முத்து சுவாமிகள் கொடியேற்றி சிறப்பு பூஜைகள் செய்து பிரமாண்ட கண்காட்சியை துவக்கி வைத்தார்.

இந்த கொலு கண்காட்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொம்மைகள் நான்காயிரம் பொம்மைகளை வைத்து கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக ,, காலை 8:00 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும், மாலையில் ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு கண்களை கவரும் ஆபரணங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும்,
ஆடல், பாடல்,நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

இதில் முக்கிய அம்சமாக,முருகன் ஞானப்பழத்தை பெறுவதற்காக சுற்றி வந்த காட்சியும்,பாற்கடல், சிவனுக்கு பிள்ளையாரும், முருகனும் பாலாபிஷேகம் செய்யும் காட்சியை தத்ரூபமாக வடிவமைத்தது குறிப்பிடதக்கது.முன்னதாக ஸ்ரீ லட்சுமி ஸ்ரீ சக்தி ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்த தீப ஆராதனைகள் காட்டி
துவங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *