தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பின்பு 17 மதுபான கடைகள் மூடப்பட்டன தற்போது மூடப்பட்ட கடைகள் தூத்துக்குடி அருகே உள்ள புறநகர் பகுதிகளில் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பட்டி துப்பாசிப்பட்டி கிராமங்களிடையே மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மேலும்
மதுபானக்கூடம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு துப்பாசிட்டி மற்றும் வெள்ளப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இன்று துப்பாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் இந்த பகுதியில் அரசு மதுபான கடை மற்றும் மதுபானக்கூடம் அமைக்க கூடாது அரசு மதுபான கடை பகுதியிலிருந்து தான் ஏராளமான பள்ளி குழந்தைகள் பள்ளிகளுக்கு பேருந்து ஏறுகின்றனர் மேலும் வேலைக்கும் ஏராளமான பெண்கள் செல்கின்றனர் எனவே உரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும் மேலும் தங்கள் கிராமத்தில் மதுவினால் பல்வேறு பாதிப்புகள் உருவாகும் எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்போது கடை பின்புறத்தில் கள்ளச் சந்தையில் காலை 11 மணியளவில் மது விற்பனை செய்ததை பார்த்த பொதுமக்கள் கண்டுபிடித்து கடைக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை மற்றும் பெண்களை கண்டவுடன் மது விற்பனையாளர்கள் அங்கே இருந்து தப்பி ஓடினர். இதை தொடர்ந்து அந்த பெண்களை போலீசார் சமரசம் படுத்தினர். இதைத் தொடர்ந்து போராடத்தை கைவிட்டு அந்த பகுதி பெண்கள் கலைந்து சென்றனர்.

தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பின்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு புதிது புதிதாக கிராமப் பகுதி அருகே மது கடைகளை திறப்பதற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *