எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள 5364 மீட்டரில் உள்ள பேஸ் கேம்ப் அடைந்த முதல் பழங்குடியின பெண் சாதனை படைத்த தெலுங்கானா பெண் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணான மாதவி கன்னிபாய் இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு நேபாளம் சென்றுள்ளார் அங்கு இருந்து 15 நாள் பயணமாக எவரெஸ்ட் மலை ஏறுவதற்காக முதல் பழங்குடியின பெண்ணாக ஏறுவதற்கு சென்றுள்ளார்
மேலும் நேபாளத்தில் ஏற்பட்டு வரும் அத அசாதாரண சூழ்நிலை காரணமாக இரண்டு நாட்கள் விமானம் ஏதும் கிடைக்காமல் இருந்தும் உள்ளனர் இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு இதுபோல் விமானம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்
உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவரது சொந்த செலவில் ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்து அதற்கு தேவையான பண உதவியும் செய்து அவர்களை எவரெஸ்ட் ஏறுவதற்கு அனுப்பி வைத்துள்ளனர் எவரெஸ்ட் மலையின் அடிவாரம் பகுதியான 5364 மீட்டர் உயரத்தை அடைந்த முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையைப் பெற்றார்
இந்த நிலையில் விமான மூலம் நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த மாதவி கன்னிபாய் மற்றும் பயிற்சியாளர் திருலோக சந்திரன் உள்ளிட்டவரை சென்னை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் திருலோகச்சந்திரன் கூறியதாவது…..
தெலுங்கான மாநிலம் ஆதில்பாத் மாவட்டத்தின் குமுரம் பீம் ஆசிபாபாத் பகுதியிலுள்ள பீமகோண்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான மாதவி கன்னிபாய் 5,364 மீட்டர் 14700 அடி உயரமுள்ள எவரெஸ்ட் அடிவாரம் பேஸ் கேம்ப் பகுதியை ஏறி சாதனை படைத்து உள்ளார். மீதமுள்ள 21,000 அடியை ஏற வேண்டும் என்றும் பயிற்சியாளர் துருலோகச்சந்திரன் வாழ்த்தும் தெரிவித்தார்
மேலும் தங்களுக்கு இரண்டு நாட்கள் விமானம் ஏதும் கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும் உடனடியாக தெலுங்கானாவில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவரது சொந்த பணத்தில் ஒரு ஹெலிகாப்டரை தயார் செய்து அதற்கு தேவையான பண உதவியும் செய்து எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு உண்டான உதவியை செய்தார் என்றும் தெரிவித்தனர்
மேலும் இந்த முயற்சியை முதல் பழங்குடியின பெண் எவரெஸ்ட் பேஸ் கேம்பை ஏறி சாதனை படைத்ததற்கு முக்காப் ரெக்கார்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார் இதுபோன்று பழங்குடியின மாணவ மாணவிகளை எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தமிழக அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பயிற்சியாளர் திரிலோக சந்திரன் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.