துறையூர் அக்-12
திருச்சி மாவட்டம் துறையூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் துணை சபாநாயகர் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதாக கூறி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கடந்த அக்டோபர் 10 தேதி குறிப்பிட்ட சில சமூக வலைத்தளங்களில் (வாட்ஸ் அப் குழுக்களில் ) ஸ்டாலின் குமார் என்னும் நான், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பேன், விரைவில் துறையூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல்,வேட்பாளர் மக்கள் நாயகன் ஸ்டாலின்குமார் என்ற வாசகத்துடன் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் புகைப்படங்கள்மற்றும் அரசு முத்திரை ஆகியன அந்த வாட்ஸ் அப் பதிவில் இடம் பெற்றுள்ளது.

இந்த பொய்யான தகவலை பரப்பி பொது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தவெக நகர செயலாளர் வினோத்குமார் துறையூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரையிடம் புகார் அளித்தார்.

இதில் தமிழக வெற்றிக் கழக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மோகன் அறிவுறுத்தலின் படி, மாவட்ட இணை செயலாளர் மதன் ஆலோசனை பேரில் நகர செயலாளர்கள் வினோத்குமார் (தெ), சூர்யா (வ), ஒன்றிய செயலாளர்கள் தர்மா (கி), ரவிச்சந்திரன் (வ), சுதாகர் (தெ),
சிவப்பிரகாசம் (மே), உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த் (தெ), குணசேகரன் (வ), சண்முகம் (ம), பேரூர் கழக செயலாளர்கள் முத்துகிருஷ்ணன் (உப்பிலியபுரம்), கண்ணன் (எ)கிருஷ்ணமூர்த்தி (பாலகிருஷ்ணம்பட்டி) மற்றும் வழக்கறிஞர்கள் அணி நிர்மல் குமார் உள்பட பல நிர்வாகிகள் காவல் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு காணப்பட்டது.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *