கரூர்: கரூர் மாவட்டம், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வன்னியர் மக்கள் கட்சி பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், கரூரை அடுத்த வாங்கல் சேனப்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வன்னியர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சக்தி படையாட்சி தலைமை தாங்கினார். சிதம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகின்ற கரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வன்னியர் மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேர்தல் தொடர்பான கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகள் கலந்துரையாடினர்.