திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 95 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு முப்பெரும் விழா (101 மரக்கன்றுகள் நடும் விழா, கலாம் கண்ட கனவு உரையரங்கம், பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு) உள்ளிட்டவைகளாக நடைபெற்றது.

தேசூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சி.செந்தில் குமார் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் ராஜவேலு, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் தேசூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, புதுவை தமிழ்ச் சங்க தலைவரும், தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி தலைவருமான கலைமாமணி முனைவர் வி‌.முத்து பங்கேற்று, ‘கலாம் கண்ட கனவு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் கலாம் கண்ட கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பேச்சு, ஒவியம், கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.தேசூர் ஊராட்சி ராதா ஜெகவீர பாண்டின், சமூக ஆர்வலர்கள் ராஜபாண்டியன், கிருஷ்ணவேணி கணினி ஆசிரியர் பா.சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் நல்நூலகர் ஜா.தமீம், கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன், விடுதி காப்பாளர் ஆர்.எஸ்.சிவக்குமார், குறும்பட துணை இயக்குனர் முகமது ஜியா, ஓய்வுபெற்ற கருவூல அதிகாரி சத்யமூர்த்தி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது ஓய்வுபெற்ற டிஇஓ பிஏ ஜெயக்கண்ணு உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் கலாமின் பிறந்தநாள் மரக்கன்றுகள் நடப்பட்டது. இறுதியில் முதுகலை ஆசிரியர் கா.சிவசங்கரி நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *