காயல் பட்டிணம் அக் 14

ஹமீதியா மசூதிக்குள் அத்து மீறி உள்ளே புகுந்து நிர்வாகிகள் மீது நடத்த பட்ட தாக்குதலுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை : கோடம் பாக்கத்தில் அமைந்துள்ள உள்ள ஹமீதியா மசூதியின் அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் ஒருவர் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து குரானை கிழித்தும் பொருட்களையும் அடித்து நொக்கியும் மசூதியின் நிர்வாகிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை இழிவாக பேசியும் உடன் இருந்த நான்கு காவல் துறையினர்கள் மீதும் தாக்குதல் நடத்தியும் அராஜகத்தில் ஈடு பட்ட இச்சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலையில் மசூதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பாங்கு சொல்ல கூடாது ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி கட்டாய படுத்தியும் ஹசரத் மற்றும் நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக காவல் துறையினர் கைது
செய்தனர். என்பது குறிப்பிடதக்கது. மேலும். அச்சம்பவம் போன்றும் கோடம் பாக்கத்தில் மசூதியின் உள்ளே அத்து மீறி நுழைந்து அராஜகத்தில் ஈடு பட்ட சம்பவத்தை வைத்து பார்க்கும் போது அமைதி பூங்காவான தமிழகத்தில் மதகலவரத்தை நிகழ்த்த திட்டம் திட்ட படுகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது ? ஆகவே . சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் இது போன்ற நபர்களை உளவுத்துறை அதிகாரிகள் முழுமையாக கண்கானிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

எனவே : கோடம் பாக்கம் மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து அராஜகத்தில் ஈடு பட்ட நபர் மீது வழக்கு பதிந்து உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட்டு சிறை படுத்த வேண்டும். மேலும் ஒரு தனிநபர் இவ்வளவு துனிவாக மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபடுகிறார் என்றால் இவரை துண்டி விட்டது யார் பின்னனியில் யாரேல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பல்வேறு கோனத்தில் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும். ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜோசப்,விஜய் மற்றும் காவல் துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் அவர்களும் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *