பர்கூர், அக். 15:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
பர்கூர் காமாட்சி மகாலில் நேற்று (அக். 14) நடைபெற்ற இவ்விழாவில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்துகளுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், த.வெ.க. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் மாவட்டப் பொருளாளர் ர.மணிகண்டன், சேலம் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயசூர்யா, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் பசவராஜ், சிவப்பிரசாத், புஷ்பராஜ், வெங்கடேஷ், கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் கௌதம், யோகேஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.