செய்தியாளர் பார்த்தசாரதி

புதுச்சேரி வில்லியனூர் மாட வீதிகளில் உள்ள நான்கு சாலை சந்திப்புகளிலும் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால், போக்குவரத்துக்கும் பொதுமக்களின் நடமாட்டத்துக்கும் இடையூறு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து ஆணையர் பிரபாகரனின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்துத் துறை எஸ்.பி. பக்தவச்சலம் தலைமையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமரன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், பஞ்சாயத்து ஊழியர்களுடன் இணைந்து காவல்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வில்லியனூர் மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்கள் எளிதாகச் சென்று வருவதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறையினர் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களின் இந்த நடவடிக்கையைப் பொதுமக்கள் வரவேற்றுப் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *