செய்தியாளர் ராஜாராம் குமார்
புதுச்சேரி ஸ்ரீ சிருங்கேரி சிவகங்கா மடம் ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்கிரஹத்துடனும், ஸ்ரீ சாரதாம்பாளின் அருளுடனும், நிகழும் மங்களகரமான பராபவ வருடம், புரட்டாசி மாதம் 24-ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) முதல் ஐப்பசி மாதம் 3-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை (20.10.2026) வரை, புதுச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ மடத்தில் எழுந்தருளியிருக்கும் தெய்வ சந்நிதிகளில் 52-ஆம் ஆண்டு ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, அகில உலக நலனுக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், ஸ்ரீ சாரதாம்பாள் மற்றும் இதர தெய்வ சந்நிதிகளில் நவராத்திரி விசேஷ பூஜைகள், ஹோமங்கள், வேத பாராயணங்கள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.