திண்டுக்கல்: திண்டுக்கல் N. பார்வதி கலை அறிவியல் கல்லூரியில் 13-வது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் பிரவீன் ஸ்ரீதர், கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன், மாவட்ட இலக்கியக் களத்தின் தலைவர் மனோகரன், செயலாளர் சிவபாலன், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ செல்வம், கல்லூரி நிர்வாக அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இப்புத்தகத் திருவிழாவில் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *